மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

தொடர்ச்சியான மணல் திருட்டு மற்றும் குப்பைத்தொட்டிகள் இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளபோதும் நடவடிக்கை எடுக்காத கோவை மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை, ஜனவரி 26

தொடர்ச்சியான மணல் திருட்டு மற்றும் குப்பைத்தொட்டிகள் இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளபோதும் நடவடிக்கை எடுக்காத கோவை மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

கோவை பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட மத்வராயபுரம் பஞ்சாயத்தில் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் கிராம சபைக்கூட்டம் இன்று  நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பின் புறப்பட்ட ஆட்சியரை, பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில், வெள்ளியங்கிரி மற்றும் கோவை குற்றாலம் செல்லும் பயணிகள்,  மரங்களின் ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அப்படியே உணவுமீதி மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை போட்டுச்செல்வதாகவும் குற்றம் சாட்டினர். மத்வராயபுரம் பஞ்சாயத்தில் குப்பைகளைக் கொட்ட குப்பைத்தொட்டிகள் இல்லாமல் இருப்பதால் சாலை முழுக்க குப்பைகள் பரவிக் கிடப்பதாக அவர்கள் கூறினர். 

மேலும், அங்குள்ள நொய்யல் ஆற்றில் தொடர்ச்சியாக மணல் திருட்டு நடைபெறுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைவதாகவும், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மணல் திருடுபவர்களுக்கு உறுதுணையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனைக் கண்டும் காணாமல் பஞ்சாயத்து செயலாளர் இருப்பதாகவும் அவர்கள் கூறினர். பொதுமக்கள் முறையிட்டதையடுத்து, பஞ்சாயத்து செயலாளருக்கு சுகாதாரத்தை பேணிகாக்க ஆட்சியர் ஹரிஹரன் அறிவுரை வழங்கி விட்டு, அங்கிருந்து சென்றார்.

நொய்யல் ஆற்றில் மணல் திருடியதாக இன்று காலை அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...