புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் உள்ள 3 புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 26

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் உள்ள 3 புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : கோவை மாவட்ட புள்ளியியல் துணை இயக்கநர் அலுவலகத்தில் புதியதாக 3 தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த ஆண்டு ஜுலை 1-ம் தேதி அன்று 35 வயதிற்கு மிகாமலும், ஏதாவது ஒரு பட்டம் மற்றும் கணிப்பொறியியல் சான்று பெற்றிருப்பவரும் அரசு நியமனத்தில் பின்பற்றப்படும் இனசுழற்சி முறையைப் பின்பற்றி பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் இருந்து வழங்கப்படும் கேள்வித்தாள் வைத்து தேர்வு நடத்தி நேர்காணல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் தொகுப்பு ஊதியமாக ரூ.15,000 மட்டும் வழங்கப்படும். இதரபடிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.  

மேற்கண்ட தகுதிகளை உடைய தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரும் பிப்., 10-ம் தேதி மாலை 05. 45 மணி வரை புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், அலுவலக வளாகம், பழைய கட்டிடம், முதல்தளம், கோவை 641018, தொலைப்பேசி எண் 0422 - 2309685 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க வேண்டப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...