கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தேசத்தின் 69வது குடியரசு தினவிழா, கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளரும், தனி அலுவலருமான டாக்டர் திரு. K.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையாளர் திருமதி. காந்திமதி ஆகியோர் பங்கேற்றினர்.

கோவை, ஜனவரி 26

தேசத்தின் 69வது குடியரசு தினவிழா, கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளரும், தனி அலுவலருமான டாக்டர் திரு. K.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையாளர் திருமதி. காந்திமதி ஆகியோர் பங்கேற்றினர்.

முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு, மாநகராட்சி ஆணையாளரும், துணை ஆணையாளரும் மாலை அணிவித்தனர். பின்னர், தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, மத்திய அரசின் ஸ்வச் சர்வேஷன், துய்மை நகரம் தரவரிசை கணக்கெடுப்பு வாகனத்தை, மாநகராட்சி ஆணையாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இவ்விழாவில், மாநகராட்சி அலுவலர்களும், துப்புரவு பணியாளர்களும், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...