தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 31-ம் தேதி இலவச பயிற்சி

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வரும் 31-ம் தேதி நடக்கிறது.

கோவை, ஜனவரி 25

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வரும் 31-ம் தேதி நடக்கிறது. 

இரண்டாம்நிலை காவலர், இரண்டாம்நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 6,140  காலிப் பணியிடங்களுக்கான தேர்வு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. வயது வரம்பு 01.07.2017 அன்று 18 வயது முதல் 24 வயதுக்குள் வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் 18 முதல் 26 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 18 வயது முதல் 29 வயதிற்கு மேற்படாதவர்களாகவும், முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், ஆதரவற்ற விதவைகள் எந்த வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்தத் தேர்விற்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த எழுத்துத் தேர்விற்கு தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் டிச., 28-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வரும் 27-ம் தேதி பிற்பகல் 12 மணிக்குள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம், சென்னை-8 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் செய்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக வரும் 31-ம் தேதி முதல் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இலவச பயிற்சி வகுப்பில் சேர தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...