சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த இளைஞர் கோவையில் கைது

சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த இளைஞரை கோவை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை, ஜனவரி 25

சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த இளைஞரை கோவை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த இஜாஸ்கான் (24) என்ற இளைஞர் கொண்டு வந்த வாட்டர் கூலர் கம்பரசரில் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.



வழக்கத்திற்கு மாறாக அதிக எடை கொண்ட அந்த கம்பரசரை அதிகாரிகள் வெட்டிப் பார்த்த போது தங்கத்தை சிறு, சிறு கட்டிகளாக வெட்டி தங்கத்தை மோட்டாரின் சிறுதுளை மூலம் அடைத்து வைத்து கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ. 90.52 லட்சம் மதிப்பிலான 2,920 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

விசாரணையில், கோவை விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்கும் வேறு ஒரு நபரிடம் ஒப்படைக்க இருந்ததாக இஜாஸ்கான் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, அவரைக் கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தங்கத்தைப் பெற காத்திருந்த நபர் யார் என்பதும் குறித்தும், எதற்காக கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...