பத்மாவத் படத்திற்கு தடைகோரி ராஷ்ட்ரீய ராஜ்புட் கர்ணி சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பத்மாவத் திரைப்படத்தை தடைசெய்யக்கோரி ராஷ்ட்ரீய ராஜ்புட் கர்ணி சேனா அமைப்பினர் சார்பாக கோவை காந்திபார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, ஜனவரி 25

பத்மாவத் திரைப்படத்தை தடைசெய்யக்கோரி ராஷ்ட்ரீய ராஜ்புட் கர்ணி சேனா அமைப்பினர் சார்பாக கோவை காந்திபார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவத் படம் வெளியாவதற்கான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு படத்தின் பெயர் மாற்றப்பட்டு, சில காட்சிகள் நீக்கப்பட்டு பத்மாவத் என்ற தலைப்பில்  நேற்று இந்தியா முழுவதும் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.



இந்த படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக ராஜபுத்திர அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இயக்குநர் பன்சாலியை சிரச்சேதம் செய்வோம், நடிகை தீபிகா படுகோனின் மூக்கை அறுப்போம் என கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், இத்திரைப்படத்தை திரையிட தடை செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்ட ராஷ்டிரிய ராஜ்புட் கர்ணி சேனா அமைப்பை சார்ந்தவர்கள் இன்று கோவை காந்தி பார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...