நீலகிரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
நீலகிரி, ஜனவரி 25
நீலகிரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், உதகையில், தேசிய வாக்காளர் தினப் பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்த பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.