கோவை மாவட்டத்தில் உள்ள வார்டுகளின் எல்லை மறுவரையறைப் பட்டியல் பற்றி கருத்துக்கள் அல்லது ஆட்சேபணை மனுக்களின் மீது ஆலோசனை நடத்துவதற்காக வரும் 31-ம் தேதி மண்டல அளவிலான கூட்டம் நடக்கிறது.
கோவை, ஜனவரி 23

தமிழ்நாடு மாநில எல்லை மறுவரையறை ஆணையத்தின் உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகளை எல்லை மறுவரையறை செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக எல்லை மறுவரையறைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இருந்து கருத்துக்கள் அல்லது மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டது.
இம்மனுக்கள் மீது எல்லை மறுவரையறை ஆணையத்தால் வரும் 31-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மண்டல அளவிலான கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எல்லை மறுவரையறை தொடர்பாக கருத்துக்கள் அல்லது ஆட்சேபணைகள் தெரிவித்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.