கோவையில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, ஜனவரி 23
கோவையில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூலூர் அடுத்த சென்னசிட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி(36). குடும்பப் பிரச்சனை காரணமாக வெள்ளியங்கிரி தனது மனைவி மற்றும் மகளைப் பிரிந்திருந்த நிலையில் வாழ்ந்து வந்தார். தனது மகளுடன் பயிலும் சக மாணவி (9) பேசினால் குடும்பப் பிரச்சனை தீர்ந்துவிடும் எனக் கூறி மகளின் தோழியை வெள்ளியங்கிரி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமிக்கு வெள்ளிங்கிரி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2015-ல் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ பிரிவின்கீழ் வெள்ளியங்கிரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 9 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.