திருப்பூர் ஜனவரி 23
திருப்பூரில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் திருப்பூர்,கோவை,ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அலுவலர்கள்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கிட வேண்டும், விடுமுறை நாட்களில் கூடுதல் பணி நேர மதிப்பூதியம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிடவேண்டும்,நேரடி வட்டாட்சியர் நியமனம் கூடாது உள்ளிட்ட 20 அம்ச கோரில்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
மேலும் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவில்லை என்றால் வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய இரு நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே திருப்பூர் வடக்கு தெற்கு, உள்ளிட்ட வருவாய் துறை அலுவலகங்களில் அலுவலர்கள் பணிக்கு ஓட்டுமொத்தமாக செல்லாமல் போராட்டத்தில் கலந்துகொண்டதால் வருவாய்துறை அலுவலகங்கள் வெரிச்சோடி காணப்பட்டது. பணிகள் முற்றிலும் முடங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.