அரசியல் கட்சிகளுக்கு ரூ. 2 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்க தடை

அரசியல் கட்சிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்க கூடாது என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

ஜனவரி 23

அரசியல் கட்சிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்க கூடாது என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

தேர்தலின் போது அரசியல் கட்சிகள் சட்ட விரோதமான பணபரிமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில், வருமான வரித்துறையினர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக 'தேர்தல் நிதிப் பத்திரங்கள்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 

இத்திட்டத்தின்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் தொழில் நிறுவனங்களும், தனிநபர்களும் குறிப்பிட்ட சில பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கிடைக்கும் தேர்தல் நன்கொடைக்கான நிதிப் பத்திரங்களை வாங்கி, அதன் மூலம் வங்கிகள் வழியாக, வெளிப்படையாக நன்கொடை அளிக்க முடியும். பத்திரத்தில் என்ன தொகை குறிப்பிடப்படுகிறதோ, அந்த தொகை குறிப்பிட்ட அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை அளிப்பதை தவிர்க்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் தலா 10 நாள்களுக்கு மட்டுமே இந்தப் பத்திரங்கள் கிடைக்கும். இந்நிலையில், இத்திட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அரசியல் கட்சிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்க கூடாது என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...