ராஜீவ்காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து பதிலளிக்க 6 வாரம் கெடு

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதம் மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

ஜனவரி 23

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதம் மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்து மத்திய அரசின் கருத்தை கேட்டு 2016 ஆம் ஆண்டு இரண்டாம் கடிதம் எழுதியிருந்தது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த விசாரணையில் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. இதனிடையே, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தங்களை விடுவிக்குமாறு, தண்டனைப் பெற்றுள்ள 7 பேரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கின் இறுதி விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பது குறித்து 6 வாரத்தில் முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், இவர்களை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...