சித்திரை சாவடி அணைக் கரைகளில் கான்கிரீட் சுவர் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு

சித்திரை சாவடி அணையின் நீர்வரும் பாதையைப் பலப்படுத்த கரையின் இரண்டு புறங்களிலும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியால் அப்பகுதியில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவை, ஜனவரி 23

கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகும் நொய்யல் ஆறானது தொண்டாமுத்தூர் உள்ளிட்டு கோவை நகரங்களுக்கு மிக முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.

தொண்டாமுத்தூர் அருகே உள்ள சித்தரை சாவடி அணையிலிருந்து செல்லக் கூடிய கிளையாறு தொண்டாமுத்தூர், சுண்டம்பாளையம், வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீராதாரமாகவும் விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 4000 ஏக்கர்  விவசாய நிலங்கள் இந்த அணையை நம்பி உள்ளன.

இந்நிலையில், சித்திரை சாவடி அணையின் நீர்வரும் பாதையைப் பலப்படுத்த கரையின் இரண்டு புறங்களிலும் கான்கிரீட் தளம்  அமைக்கும் பணி பொதுப்பணித்துறையால் சுமார் ரூ. 2 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.



இதனால், அப்பகுதியில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் கட்டிட வேலை நடைபெற்று வரும் கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.



"இந்த பணிகள் தொடர்ந்தால் சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயம் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டு விடும். விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் பணிகள் தொடர வேண்டும்," என்றார் விவசாயி செ.வேலுசாமி.



இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், "சித்திரை சாவடி அணையை மீண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். கான்கிரீட் சுவர்கள் அமைப்பதால் நிலத்தடி நீர் மற்றும் வனவிலங்குகளும் பாதிக்கப்படும். எனவே கான்கிரீட் சுவர்களுக்கு பதிலாக மாற்று கட்டுமான பொருட்களைக் கொண்டு அணையை புதுப்பிக்க வேண்டும்" என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...