அப்பல்லோவின் போலி மருந்து சீட்டைத் தயாரித்த மூன்று பேர் கோவையில் கைது

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பெயரில் போலி மருந்து சீட்டு தயாரித்து, போதை மருந்து வாங்க முயன்ற மூன்று பேரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை, ஜனவரி 20

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பெயரில் போலி மருந்து சீட்டு தயாரித்து, போதை மருந்து வாங்க முயன்ற மூன்று பேரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பிரபல மருந்துக்கடை ஒன்றிற்கு சென்ற மூன்று வாலிபர்கள், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பாரஜரஜதாஸ் கையெழுத்து இடப்பட்ட மருந்து சீட்டை கொண்டு மாத்திரை வாங்க முற்பட்டனர். அந்த மருந்து சீட்டில், அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் போதை மருந்துகள் இடம்பெற்றிருந்தது.

அந்த மருந்து சீட்டில், அப்பல்லோ மருத்துவமனையின் பெயர், மருத்துவர் பெயர் மற்றும் கையெழுத்து இருந்தது. ஓடிசாவில் இருந்து இங்கு மருந்து வாங்கவேண்டியதன் அவசியம் என்ன..? என்று சந்தேகித்த மருந்துக்கடை ஊழியர்கள், இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த மூன்று வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள், ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (19), ஜவஹர் (19) மற்றும் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (19) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள், போலி மருந்து சீட்டு மூலம் போதை மருந்துகளை பெற முயன்றதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...