பேருந்து கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி

பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது பகல் கொள்ளை எனக் கூறிய பொதுமக்கள் , தமிழக அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்தனர்.

கோவை, ஜனவரி 20

பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது பகல் கொள்ளை எனக் கூறிய பொதுமக்கள் , தமிழக அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்தனர். 

தமிழக அரசு நேற்று அதிரடியாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சாதாரண கட்டணமாக இருந்த ரூ. 3-ல் இருந்து ரூ. 5 ஆகவும், ரூ. 9-லிருந்து ரூ.17 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வெளியூர் செல்லும் பேருந்து, சொகுசு பேருந்து கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழக அரசின் இந்தக் கட்டண உயர்வு பகல் கொள்ளை. மக்கள் விரோதசெயல். தமிழக அரசு 20% தான் கட்டணத்தை உயர்த்தியதாகக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. 80% கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது, எனக் கூறினர். 

பேருந்து பயணி கோபால் என்பவர் கூறும்போது :- சேலம் செல்ல ரூ. 100 முதல் ரூ. 120 வரை இருந்த பேருந்து கட்டணம் தற்போது ரூ. 200-ல் இருந்து ரூ. 220 வரை உயர்ந்துள்ளது. போக்குவரத்து துறை ஊழியர்களின் பணத்தை வேறு காரணங்களுக்காக செலவு செய்துவிட்டு, அதனை ஈடுசெய்ய இந்த உயர்வை அமல்படுத்தி உள்ளது. இது பகல் கொள்ளை. சாதாரண கட்டணம் என நினைத்து பேருந்தில் ஏறிய பயணிகள் சிலர் பயணம் மேற்கொள்ள முடியாமல் திரும்பினர். இவ்வாறு தெரிவித்தார். 

கமலா என்ற பெண்மணி கூறும்போது, தனக்கு 3 குழந்தைகள் உள்ளது. தன்னுடைய மாத சம்பளமே ரூ.4,000-ம் தான். குழந்தைகள் கல்வி செலவு குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத நிலை உள்ளபோது இந்தப் பேருந்து கட்டணம் பேரிடியை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.

மென் பொறியாளர் பிரனேஷ் கூறுகையில், இந்தக் கட்டண உயர்வு என்பது அனைவருக்கும் பொருந்தும். ஏற்கனவே, ஜி.எஸ்.டி.யில் இருந்து மக்கள் மீளாத நிலையில், இந்தப் பேருந்து கட்டண உயர்வு மக்களை மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறாவிட்டால் மக்கள் இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்பும் தூரம் வெகுதொலைவில் இல்லை. இந்தப் பேருந்து கட்டண உயர்வு பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...