நாட்டில் புழக்கத்தில் இருக்கும் அனைத்து ரூ. 10 நாணயங்களும் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஜனவரி 17

மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் நீண்ட காலத்துக்கு புழக்கத்தில் இருக்கும். ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் இந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அந்த வகையில் புழக்கத்தில் உள்ள ரூ. 10 நாணயங்களிலும் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.
ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ரூ. 10 நாணயங்களில் இருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், அனைத்துமே சட்டப்படி செல்லுபடியாகும். இந்த நாணயங்கள் அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றவை.
இருப்பினும், பத்து ரூபாய் நாணயங்கள் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதால் சில இடங்களில் இந்த நாணயங்களைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் பல இடங்களிலும் வணிக மையங்களிலும், கடைகளிலும் இந்த நாணயங்களைப் பெற்றுக் கொள்வதில்லை என்று ரிசர்வ் வங்கிக்குப் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து ரூ.10 நாணயங்களும் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.