சாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் ”சமத்துவப் பொங்கல்”

கோவையில் சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை, ஜனவரி 16

கோவையில் சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

வீரகேரளம் அருகேயுள்ள தோட்டத்தில் சாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 1997 ஆண்டு முதல் இன்று வரை இருபது ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் திருவிழாவின் போது ஒன்று கூடி சாதி, மதம் கடந்து பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 



இந்தப் பொங்கல் விழா நிகழ்ச்சியில் குண்டு ஆடுதல் முதல் பம்பரம், பட்டம் விடுதல், உரி அடித்தல் உட்பட பாரம்பரியம் மிக்க விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு இல்லாமல் நடைபெற்றது. மேலும், குழந்தைகளுக்குப் பட்டம் செய்வது முதல் பறக்கவிடுவது வரை சொல்லி கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தாங்கள் வர முடியவில்லை என்றாலும் கூட தங்களது வயது முதிர்ந்த பெற்றோர்களை அனுப்பி நண்பர்களின் குழந்தைகளோடு, குழந்தையாக விளையாடி மகிழ்ந்தனர். சொந்தகாரர்களுக்கு அழைப்பு இல்லாமல் நண்பர்களின் குடும்பம் மட்டுமே இணைந்து சமத்துவ பொங்கலை இனிமையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

சாதிய கொலைகள் பல அரங்கேறி வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் இந்த சமத்துவப் பொங்கல் விழா அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...