அதிநவீன ஜிபிஎஸ் கருவியுடன் புதிய ரோந்து வாகனங்கள் அறிமுகம்

நீலகிரியில் அதிநவீன ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நீலகிரி, ஜனவரி 13

நீலகிரியில் அதிநவீன ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 



உதகையில் அதிநவீன ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய புதிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 16 வாகனங்கள் இயக்கப்பட உள்ளது. இவ்வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவிகள் கண்காணிப்பு அறையில் உள்ள கணினிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், வாகனங்கள் எங்கு உள்ளது என்பதை துல்லியமாக கண்காணிக்க முடியும். 

மேலும் இவ்வாகனத்தில் உள்ள காவலர்களிடம் செல்போன்கள் 100 சேவையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், விபத்து மற்றும் அவசர காலங்களில் இவர்களிடம் உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். இந்த நிலையில், முதற்கட்டமாக, பயன்பாட்டிற்காக 6 வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உதகை நகர காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பல காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...