போகிப் பண்டிகை : டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்

போகிப் பண்டிகையை அன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 11

போகிப் பண்டிகையை அன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல்நாள் நாம் “போகிப் பண்டிகை” கொண்டாடுகிறோம். இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பதென்று “பழையன கழிதல்” என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றைத் தீயிட்டு கொளுத்துவார்கள்.  பெரும்பாலும், நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.  

ஆனால், தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்கையில் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு நம் நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சுப் புகை கலந்த பனி மூட்டத்தால் ஆகாய விமானங்கள் புறப்படுவதற்கும், சாலை போக்குவரத்துக்கும் தடை ஏற்படுகிறது. இது போன்ற செயல் மூலம் காற்றை மாசுபடுத்துவதும் சட்டப்படி குற்றமாகும். 

மேலும், உயர்நீதிமன்றம், பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்குத் தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை காவல்துறை மூலமாக எடுக்கப்படும்.  எனவே, போகிப் பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. போகிப் பண்டிகை நமக்கு இனிய ஆரம்பமாக இருக்கட்டும், அன்று குப்பையை முறைப்படி ஒழித்து, பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாமலும் கொண்டாடுவோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...