வால்பாறையில் சிறுத்தைப்புலி தாக்கி காளை மாடு பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாட்டை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஜனவரி 11

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாட்டை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



வால்பாறை காமராஜ்நகர் பகுதியில் வசித்து வருபவர் அன்பழகன். இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாடு, மாலை நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அன்பழகன் பல இடங்களில் தனது காளை மாட்டைத் தேடியுள்ளார். அப்போது, சவரங்காடு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தனது 2 வயதுள்ள காளை மாடு சிறுத்தைப்புலி தாக்கி இறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், வால்பாறை வனச்சரகர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்தார். தொடர்ந்து காளை மாடு இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டார். 

சமீபகாலமாக, வால்பாறைநகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து அதனைப் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...