போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - வைகோ

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 5

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசியவர் கோவை மாநகராட்சியில் சொத்து பெயர் மாற்றம், குப்பை வரி, குடிநீர் வைப்பு தொகை உள்ளிட்ட வரி உயர்வை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் கோவையில் இயங்கி வரும் இந்திய அரசு அச்சகம் இடமாற்றம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கதக்கது எனவும் இம்முயற்சியை கைவிட வேண்டுமெனவும் தெரிவித்தார். மத்திய அரசு பாசிச போக்குடன் செயல்படுவதாகவும், தமிழக வாழ்வாதராம் ஒவ்வொன்றாக பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

பேருந்து தொழிலாளர் வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல் பேச்சுவார்த்தை மூலம் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனவும் வைகோ வலியுறுத்தினார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...