நீலகிரி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மின்சாரம் தாக்கி விவசாயி பலி, அ.தி.மு.க வினர் மீது பொது மக்கள் கடும் அதிருப்தி



நீலகிரி, டிசம்பர் 28

நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிக் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயக்கூலி ஒருவர் பலியாகியுள்ளார். 

நீலகிரி மாவட்டம் கொடப்பமந்து பகுதியை சேர்ந்தவர் பாபு (48). விவசாயக் கூலியான இவர் லாரியின் மூலம் தோட்டத்திற்கு வந்த உரத்தை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த பகுதியில் அ.தி.மு.க.வின் கொடி இரும்பு கம்பியில் கட்டி பறக்கவிடப்பட்டிருந்தது. 

அந்த இரும்புக்கம்பி மின்சார ஒயரில் உரசிக்கொண்டிருந்தது. 

இதை கவணிக்காத பாபு அந்த கொடிக்கம்பத்தின் மீது சாய்ந்தார். 

இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார். 

விவசாயக்கூலியின்  உயிரிழப்புக்கு ஆளும் கட்சியினரின் அலட்சியமே காரணம் என்றும், உயிர்பலிக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடப்பமந்து பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதன்பிறகே, பாபு-வின் மரணம் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டதாக தெரிகிறது.

கடந்த 3-ம் தேதி கோவையில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இதற்காக அவிநாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற வாலிபர் பரிதாபமாக பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிரலைகளை உருவாக்கியது. 

சாலையை ஆக்கிரமித்து அலங்கார நுழைவு வாயில்கள் அமைத்ததே இவ்விபத்திற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், டிப்பர் லாரி மோதியதால் தான் ரகுபதி பலியானார் என்று கூறி வழக்குப் பதிந்தது கோவை மாநகர காவல்துறை. 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது கோவையில் வாலிபர் பலியானது போல், மீண்டும் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார் என்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் என்ற பெயரில் அலட்சியப்போக்காக செயல்பட்டு, கோவை மற்றும் நீலகிரியில் இரண்டு உயிர்களை காவு வாங்கி விட்டனர் அ.தி.மு.க. வினர் என்று கடுமையான கண்டனங்கள் மக்களிடையே எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...