கோவை, டிசம்பர் 27
நாட்டில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி வழக்கில் இருந்து விடுதலையான பின்பு கோவை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிற்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2ஜி ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் திமுக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா இன்று கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் ஆ.ராசாவிற்கு திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் அவரை வரவேற்கத் திரண்டனர்.

மூன்று நாட்கள் பயணமாக கோவை வந்துள்ள அவர், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதனிடையே, ஆ. ராசாவை காண திடீரென ஏராளமானோர் திரண்டதால் விமான நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.