கோவை, டிசம்பர் 26
சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முபாரக்கை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் மனு தொடுத்துள்ளனர்.

இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார் (35) கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதியன்று மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து துடியலூர் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தினால் வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சதாம் (27), அபுதாகிர் (27) மற்றும் ஜி.எம். நகரைச் சேர்ந்த சுபைர் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், அபுதாகிர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட முபாரக் (28) தலைமறைவாக இருந்த நிலையில், பொள்ளாச்சி வடக்கிபாளையத்தில் அவரைக் கைது செய்தனர். பின்னர், இன்று சிறப்பு நீதிமன்றத்தில் முபாரக் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி குணசேகரன், அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே, முபாரக்கை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.