கோவையில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்


கோவை, டிசம்பர் 26

கோவையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த நகைப்பட்டறை ஊழியர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை தேசிய துப்புறவு பணியாளர்கள் மறுவாழ்வு நல ஆணையம் வழங்கியது.

ஆர்.எஸ். புரம் பகுதியில் நகைப்பட்டறை கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஏழுமலை, கவுரிசங்கர், சூர்யா ஆகிய 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய துப்புறவு பணியாளர்கள் மறுவாழ்வு நல ஆணையர் ஜெகதீஷ் கிரேமானி நேரில் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, தனியார் உணவகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரண தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.



பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உயிரிழந்த கவுரிசங்கரின் குடும்பத்தினருக்கு வீடு வழங்கவும், அவரது சகோதரர் சூர்யகுமாருக்கு இலவச கல்வியும், தாய் யசோதாவிற்கு வேலைவாய்ப்பும், ஏழுமலையின் சகோதரர் பூபதிக்கு இலவச கல்வியும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

2013 ஆம் ஆண்டின் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டறிந்து ஒரு முறை இறுதி நிவாரணமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்க உச்சநீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.  இருப்பினும் உள்ளாட்சி அமைப்புகள் இது தொடர்பாக இதுவரை ஆய்வு நடத்தவில்லை.



இது தொடர்பாக கோவையில் ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையை ஆணையத்தில் சமர்ப்பித்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் எத்தனை கழிவு நீர் அகற்றும் இயந்திரங்கள் உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும். கூடுதல் இயந்திரங்களை மாநகராட்சிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியாருக்கு இது போன்ற நிதியுதவிகள் இனிமேல் வழங்கப்படாது. கழிவு நீர் அகற்றுவது தொடர்பாக மாநகராட்சிக்கு மட்டுமே மக்கள் தெரிவிக்க வேண்டும். 

தமிழகத்தில் போதிய பாதுகாப்பின்றி கழிவுகளை அகற்றிய 144 பேர் இறந்துள்ளதாகத் தன்னார்வ நிறுவனம் அளித்த ஆய்வறிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஆய்வு நடத்தப்படும். என்றார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் மற்றும் மாவட்ட அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...