கோவை, டிசம்பர் 25
தேசிய ஸ்கேடிங் சாம்பியன்ஷிப்பிற்கான தகுதி போட்டிகள் வ.உ.சி மைதானத்தில் இன்று முதல் வியாழக்கிழமை (28.12.2017) வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு ரோலர் ஸ்கேடிங் அசோசியேஷன் சார்பாக நடத்தப்படும், 27வது மாநில அளவிலான தகுதி போட்டியில், தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 1200 ஸ்கேடிங் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

வயது அடிப்படையில் ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட, ஆண் மற்றும் பெண் ஸ்கேட்டிங் வீரர்கள், கால்களில் சக்கரத்தைக் கட்டிகொண்டு மைதானத்தில் சிறுத்தையாக சீரிப்பாய்ந்தனர்.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு ரோலர் ஸ்கேடிங் அசோசியேஷனின் உறுப்பினர், S.P ராமநாதன் கூறியதாவது, 'சென்னைக்கு அடுத்து கோவை மக்கள் ஸ்கேடிங் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சுமார் 18 வருடங்களுக்கு பிறகு, கோவையில் தேசிய ஸ்கேடிங் போட்டிகளுக்கான தகுதி போட்டிகள் நடைபெறுவதால், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஸ்கேடிங் விளையாட்டிற்கான வசிதகள் கொண்ட பிரத்யேக மைதானம் தற்போது நகரில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்து வரும் போட்டிகளில் கோவையைச் சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து பல சாதனைகளை படைப்பார்கள்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.