கோவை, டிசம்பர் 29
சின்ன எம்.ஜி.ஆராக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிப்பெற்றுள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் முன்னிலையில் இருந்து வருவதையடுத்து, கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிடிவி ஆதரவாளர் புகழேந்தி தலைமையில்
பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, எம்.ஜி.ஆர்.நினைவு தினமான இன்று சரித்திரம் நடந்துள்ளதாகவும், சின்ன எம்.ஜி.ஆராக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். ஆட்சி இல்லை, அதிகாரம் இல்லை என்றாலும் தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும், திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும் நிலையில் தேர்தல் முடிவுகள் உள்ளதாக கூறிய அவர், 50 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் தினகரன் வெற்றிப்பெறுவதுடன்,
சசிகலா வழியில் டிடிவி தினகரன் முதல்வராக அனைவரும் விரைவில் ஒன்றிணைவார்கள் என்றும் உறுதி அளித்தார்.
மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜகவை விட நோட்டா அதிகமாக உள்ளதாகவும், தமிழகத்தில் பாஜக கிடையாது என்றும், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடந்த அலங்கோலமான ஆட்சியின் நிலையையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு காண்பிப்பதாக அவர் விமர்சித்தார்.