திருப்பூர், டிசம்பர் 21
திருப்பூரில் வடமாநில பெற்றோரால் கொடுமைப்படுத்தப்பட்ட இரு சிறுவர்கள் காவல்துறையால் மீட்பு. தலைமறைவான பெற்றோர் குறித்து போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் . இந்நிலையில் திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிபாளையத்தில் சில நாட்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் இரு குழந்தைகளுடன் குடிபுகுந்துள்ளனர் .
அந்த தம்பதி வந்ததில் இருந்தே குழந்தைகளை கொடுமைபடுத்தியுள்ளனர் . இந்நிலையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர் . அப்போது அவர்களது 4 வயது மகனின் உடலில் சூடு வைத்துள்ளனர் இது குறித்து காவல்துறையினருக்கு தெரிவிப்பதாக அக்கம்பக்கதினர் கூறியதையடுத்து தம்பதியினர் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறை 4 வயதுடைய சிறுவன் மற்றும் இரண்டரை வயதுடைய சிறுமியை மீட்டு சிகிச்சையளித்து அனுப்பர்பாளையத்தில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர் .
மேலும் தலைமறைவான சிறுவர்களின் பெற்றோர்களன மணோஜ்-பிஜிலு தம்பதியினரை போலிசார் தேடி வருகின்றனர் .