கோவை, டிசம்பர் 21
சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி, நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
ஆண்டுதோறும் சர்வதேச எய்ட்ஸ் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், கோவை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் சார்பில் இரண்டு சக்கர வாகன உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யாஹரி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி முதல்வர் பி.சுவாமிநாதன், ரத்தவங்கி மருத்துவ அலுவலர் எம்.சுமதி, மாவட்ட மேற்பார்வையாளர் ஆர்.வி.எம். குமணன் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.