கோவை, டிசம்பர் 21
கோவை மாவட்ட மத்திய சிறையின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகச் சிறை கண்காணிப்பாளர் எம். செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், கோவை மத்திய சிறையில் பல்வேறு பிரிவில் காலிபணியிடங்கள் உள்ளன. உற்பத்தி பிரிவில் காலியாக உள்ள மின்கம்பியாளர் 2 காலிபணியிடங்களும், நெசவு பணியாளர் 1 காலிபணியிடமும், நெசவியல் வல்லுநர் 1 காலிபணியிடமும், தையல் போதகர் 2 காலிபணியிடங்கள் என மொத்தம் 6 காலிபணியிடங்கள் நிரப்பவதற்கு நேர்காணல் நடைபெறவுள்ளது. மின் கம்பியாளர் பணியிடத்திற்குப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள், இதர வகுப்பைச் சார்ந்தவர்களும், தையல் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் அருந்ததியினர், இதர வகுப்பைச் சேர்ந்தவர்களும், நெசவு பணியாளர், நெசவியல் வல்லுநர் பணியிடத்திற்கு அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
நெசவியல் வல்லுநர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக ஜனவரி 8-ம் தேதியன்றும், நெசவுப் பணியாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக ஜனவரி 9-ம் தேதியும், தையல் போதகர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக 11-ம் தேதியும், மின்கம்பியாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக 12-ம் தேதி என அனைத்து காலிப் பணியிடங்களுக்கும் அந்தந்த நாட்களில் காலை 11 மணியளவிலும் நேர்காணல் நடைபெறவுள்ளது.
இந்த நேர்காணலில் கல்வித் தகுதி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், தொழிற்கல்வி சான்றிதழ், முன்அனுபவம் சான்றிதழ் மற்றும் முன்னுரிமைச் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு மேற்கண்ட நாட்களில், கோவை மத்திய சிறைகண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெறும். இவ்வாறு கூறினார்.