கோவையில் புத்தாண்டன்று குடி போதையில் வண்டி ஓட்டினா அபராதம் இல்லை..! : ஆனா இதெல்லாம் இருக்கு...!


கோவை, டிசம்பர் 21

புத்தாண்டு வந்துவிட்டாலே, அடுத்த நாள் முதல் எதோ கண்டம் விட்டு கண்டம் போய் வாழப்போற "பீலிங்" வந்துருது நம்ம மக்களுக்கு.

இந்த ஆண்டின் கடைசி தினத்தை நல்லா சிறப்பா கொண்டாட, வீட்டு மொட்டை மாடிகளில் பெரியவர்களும், வீதிகளில் இறங்கி இளசுகளும் தர்மத்திற்கு கும்மாளம் போட ஆரம்பித்து விடுகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே, நல்லா குடி போதைல ஊர சுத்தனும், "ஹாப்பி நியூ இயர்" என்று தொண்ட வலிக்க கத்தனும்-ங்கிறது எழுதப்படாத சட்டங்களாக வகுக்கப்பட்டுவிட்டது இந்த பூவுலகில். அதன்படி, ஆண்டுதோறும் வண்ண வண்ண பட்டசுகளுடனும், பெருமகிழ்ச்சியுடனும் புத்தாண்டை ஆனதமாக வரவேற்று வருகிறோம்.  

கோவையை பொறுத்தவரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இல்லை. அவினாசி சாலைக்கு இரவு 11 மணிக்கு மேல் சென்றால் தெரியும். நல்லா "பீக்" ஹவரில் வண்டி ஓட்டினா கூட அத்தனை டிராபிக் இருக்காது, அத்தனை டிராபிக். பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள் தான் கண்ணுக்குப் புலப்படும். அதில் பெரும்பாலான வாகனங்களில் பயணிப்பவர்கள் சுய நினைவே இல்லாமல் செல்வதுதான் உண்மை. 

சாகசங்கள்

மற்றவர்களை கவருவதற்காக இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள் 'பைக் ஸ்டேண்டை' தார் சாலையில் ஊராய வைத்து தீப்பொறியை கிளப்பயவாறே செல்வார்கள். கார்களில் வரும் சிலர் கதவுகளை திறந்து உடலை வெளியே நீட்டி சாகசங்களை நிகழ்த்தியவாறே பயணிப்பர். பலரும் ஒலிப்பானை  அழுத்தியபடியே செல்வதால் சாலையோரம் உள்ள வீடுகளில் குடியிருப்போர் காதுகளில் பஞ்சை வைத்துக்கொள்ளும் அளவுக்கு சத்தம் எழுகிறது. வழக்கமாக நம்ம கோவையில் புத்தாண்டன்று நடைபெறும் நிகழ்வுகள் இவை. இந்த சாகசங்களை செய்யும் போது பந்தாவாக இருந்தாலும், அவர்களது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதே உண்மை. கடந்த புத்தாண்டு தினத்தில் கோவையில் 8 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.   

மது போதையில் தாறுமாறாக வண்டியை ஓட்டும் இவர்களை என்னதான் செய்வது. "ஓரிருவர் என்றால் மடக்கி 'பைன்' போடலாம். 

ஊரே குடிச்சுட்டு சுத்தும்போது எப்படி கட்டுப்படுத்துறது" என்று கடுப்பாகின்றனர் காவல்துறையினர்.

என்னதான் செய்வது?

இப்படி நெறியே இல்லாமல் தறிகெட்டு ஓடும் வாகனங்களையும், அவற்றை இயக்கும் வாலிபர்களையும் என்னதான் செய்வது? இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநகரில் புத்தாண்டு தினத்தன்று மதுபோதையில் வாகனம் ஓடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்போவது இல்லை. மாறாக அவர்களைப் பிடித்து, பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பந்தல்களின் கீழ் அமரவைத்து சாலை பாதுகாப்பு வழிமுறைகளை கற்றுக்கொடுப்போம். மேலும், போதை தெளியும் வரையில் அவர்களை அதே இடத்தில் அமர வைப்போம்"  என்றார்.

கடந்த ஆண்டு இதே போல், சாலையோரங்களில் 28 இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு 22 இடங்களில் இதுபோன்ற பந்தல்கள் அமைக்கப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஆகவே மக்களே, போதையை போட்டு போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல். "ஸ்வீட் எடு கொண்டாடு" என்று புத்தாண்டை சிம்பிளா கொண்டாடும்படி சிம்ப்ளி-சிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...