பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு போராட்டம்

கோவை, டிசம்பர் 20

முழுநேர அரசு ஊழியராக்குதல், நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாலைநேர கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழரை மணிநேரத்திற்கு மேலாக, கடந்த 35 ஆண்டுகாலம் பணியாற்றி வரும் ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் அறிவித்ததை உடனடியாக அமல்படுத்த வேண்டும், கடந்த 2016 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து 21 மாதங்களுக்கு ஊதியக்குழு அறிவிப்பின்படி, நிலுவைர்த தொகை வழங்க வேண்டும், சனிக்கிழமை விடுமுறையை மீண்டும் வழங்க வேண்டும், பள்ளிகளில் வழங்குவதுபோல, அங்கன்வாடிகளுக்கும் கோடைவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். 



மாநில செயற்குழு முடிவின்படி, நடைபெற்ற முதலமைச்சரின் கவனஈர்ப்பு மாலைநேர ஆர்ப்பாட்டத்தில், ஊழியர் சங்கத்தலைவர் சாந்தி, பொருளாளர் அலமேலுமங்கை, செயலாளர் ஸ்டெல்லா, துணைத்தலைவர்கள் சித்ரா, பூங்கொடி, சரஸால், வேலுமணி மற்றும் இணைச்செயலாளர்கள் சாரதா, பாக்கியம், மாலினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...