மாவோயிஸ்ட் சைனி நீதிமன்றத்தில் ஆஜர்

திருப்பூர், டிசம்பர் 20

திருப்பூரில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சைனி நீதிமன்றத்தில் ஆஜர் - கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றம் வழக்கை காலதாமதப்படுத்துவதாக புகார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களான ரூபேக்ஷ், அவரது மனைவி சைனி,மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த அனூப்,கர்நாடகா  மாநிலத்தை சேர்ந்த வீரமணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் போலீசாரின் விசாரணையில் இயக்கத்தின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ரூபேக்ஷ் மற்றும் அவரது மனைவி சைனி ஆகிய இருவரும் திருப்பூர் எம்.எஸ், நகரில் தங்கி இருந்த போது முறைகேடாக ஆவணங்களை கொடுத்து சிம்கார்ட் வாங்கி பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்தது. 

இதனை அடுத்து முறைகேடாக சிம்கார்ட் பயன்படுத்தியதாக திருப்பூரில் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இன்று கோவை மத்திய சிறையில் இருந்து  சைனி பலத்த போலீஸ் பாதுகாப்புடன்   நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். 

வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சைனி தனது வழக்கை நீதிமன்றம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காலம் தாழ்த்தி வருவதாக புகார் தெரிவித்தார்.

  சைனி பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...