கோவை, டிசம்பர் 20
கோவையில் பள்ளி மாணவிகள் இருவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் பீளமேடு அருகே உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் நேற்று திடீரென் மாயமாகினர்.
இது தொடர்பாக மயாமான பள்ளி மாணவியின் தந்தை பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவிகள் இருவரையும் தேடிவந்தனர்.
இந்த நிலையில், குன்னூரை சேர்ந்த ஆசிக் (26) என்ற வாலிபர் மாணவிகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் அந்த வாலிபரின் தொலைபேசி எண்ணை வைத்து அவர் நீலகிரியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து, நீலகிரிக்கு சென்ற போலீசார் கூடலூரை அடுத்த தொப்பக்காடு என்ற பகுதியில் இருந்த அந்த இரண்டு மாணவிகளையும் மீட்டனர்.
விசாரணையில் ஆசிக் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், மாணவிகளை கடத்திச் சென்று விடுதி அறையில் தங்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்தது.
இந்த சூழலில், கடத்தப்பட்ட இரண்டு மாணவிகளையும் மீட்ட போலீசார் அவர்களது பெற்றோர்களிடம் ஓப்படைத்தனர். மேலும், அந்த வாலிபரை கைது செய்து சிறையிலடைத்தனர்.