கோவை, டிசம்பர் 19
ஈஷா யோக மையம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளியங்கிரி பழங்குடி பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவையில் வெள்ளியங்கிரி பழங்குடி பாதுகாப்பு சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சி தீடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கோவை பிரஸ் கிளப்பில் வெள்ளியங்கிரி பழங்குடி பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன், தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி, சுற்றுசுழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது முதலில் பேசிய முத்தம்மாள், ஈஷா மையத்திடம் இருந்து 44 ஏக்கர் நிலத்தை மீட்பதற்காக உருவாக்கப்பட்ட வெள்ளியங்கிரி பழங்குடி பாதுகாப்பு சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவினை முன்னிட்டு இன்று கூட்டம் நடத்த திட்டமிருந்தது. ஆனால், மேலிடத்தில் இருந்து நெருக்கடி வந்ததால் தனியார் ஓட்டல் அரங்கு நிர்வாகம் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கவில்லை. இதனால், கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும், இரண்டு நாட்களுக்கு பிறகு, கண்டிப்பாக இந்த கூட்டத்தை நடத்தியே தீருவோம்.
ஈஷா மையம் அருகே உள்ள 44 ஏக்கர் மலைவாழ் மக்களின் நிலத்தை பழங்குடி மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என போராடி வருகிறோம். மேலும், மலைவாழ் மக்களுக்கான நிலத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். என் நிலத்தை மீட்க எந்த நடவடிக்கை எடுத்தாலும், ஏதாவது ஒரு தடை போடுகின்றனர். தமிழக அரசு நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
இதனைத்தொடர்ந்து பேட்டியளித்த சுற்றுசூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ், சேலத்தில் 9 லட்சம் மரங்கள் நடப்பட்டதாக ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் போலியான தகவலை தெரிவித்து வருகின்றார். வெள்ளியங்கிரி பகுதியில் 64 லட்சம் மரமும், ஆசுரமத்தில் 10 லட்சம் மரமும் நடப்பட்டு இருப்பதாகத் தொலைக்காட்சி ஒன்றில் ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார். நேரில் போய் பார்த்தால் அந்தளவு மரங்கள் இல்லை. மீடியாவில் ஜக்கி வாசுதேவ் பொய் பேசிக்கொண்டு இருக்கின்றார். தமிழக அரசு ஒரு சாமியாரின் பேச்சை கேட்டுக்கொண்டு செயல்படுவது சரியல்ல.
சுற்றுச்சுழலை வைத்து மோசடி நடத்தப்படுகிறது. மரங்கள் நடப்பட்டதால் 7 சதவீதம் இயற்கைவளம் அதிகரித்துள்ளதாக பொய்யான தகவலை ஜக்கி வாசுதேவ் பரப்புகின்றார். இதை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களுக்கு உண்டு. தலைமை செயலாளர் அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாகவே, தனியார் அரங்கில் நடத்துவதாக இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் நிச்சயம் கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் கூறுகையில், நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தமிழக அரசே ஈஷா மையம் குறித்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. நிலத்தை ஆக்கிரமிக்க உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜக்கி வாசுதேவ் ஒரு ஆன்மீக தொழிலதிபர். நாடு முழுவதும் நதிகளை இணைக்க 5,60,000 கோடி செலவாகும் என்ற திட்டத்தை செயல்படுத்த ஆறுகளை மீட்போம் என பயணத்தை ஜக்கிவாசுதேவ் தொடங்கி இருக்கிறார். ஆனால், அதற்கான திட்டத்தை அவர் வழங்கவில்லை. 15 ஆண்டுகள் கழித்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தினாலும், இதற்கு ஆகும் 87 கோடி பில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்யப்போவது யார். நதிகள் இணைப்புப் பேரணி பயணத்திற்கு தொழிலதிபர் அதானி உள்ளிட்ட பெருமுதலாளிகள் முதலீட்டில்தான் பயணமே நடந்தது. 37 கால்வாய்கள், 3,000 அணைகள் கட்டி ஆறுகளை இணைப்பது என தண்ணீரை வியாபாரப் பொருளாக மாற்ற முயற்சிக்கின்றனர். எனக் கூறினார்.
தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், அரங்கத்திற்குள் நடக்கும் நிகழ்ச்சிக்குக் கூட அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது சரியானதல்ல. கருத்துரிமைக்கு எதிராக பேசுவதற்கும் கூட அனுமதி மறுக்கப்படுகின்றது. மேடைக்கு கீழே முதலமைச்சர் அமர்ந்திருக்க மேடைகளில் ஜக்கி வாசுதேவ் அமர்ந்திருக்கும் போதே ஜக்கியின் செல்வாக்கினை புரிந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறு பேசினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், கோவையில் யானை வழி தடங்களை மறித்து மத நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் கட்டிடங்கள் கட்டியுள்ளன. யானைகளின் வழித்தடங்களை மீட்க வேண்டியப் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. என்றார்.