நகைக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை : திருட்டு நகையை வாங்கியவரையும் 2 ஆண்டு சிறையில் அடைக்க உத்தரவு

கோவை, டிசம்பர் 18

கோவை அருகே 35 சவரன் நகையைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், திருட்டு நகையை வாங்கியவரையும் 2 ஆண்டு சிறையில் அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது. 

மணியகாரம்பாளையம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்(49). இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வெளியூரில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் உறவினரைக் கடந்த 3.10.2011 அன்று பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் சென்று பார்த்து விட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸார், இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இதனிடையே, கடந்த  3.12.2011 அன்று காரைக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பைக்கில் வந்த 3 பேரைச் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். அப்போது, கோவை சரவணம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, காரைக்குடி போலீசார், கோவை தனிப்படையினருக்கு தகவல் கொடுத்தனர். தனிப்படையினர் காரைக்குடி சென்று கொள்ளையர்களை கோவை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது கொள்ளையில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன்(30), காரைக்குடி சூடாமணி நகரைச் சேர்ந்த ரகுராமன்(31), அறந்தாங்கியை சேர்ந்த சின்னையா மகன் முத்துக்குமார் என்பது தெரியவந்தது. 

மேலும், கோவை மணியகாரம்பாளையத்தில் கொள்ளையடித்த 35 பவுன் நகையைச் சென்னை டி நகரில் உள்ள நகை கடை உரிமையாளர் வினய்குமார்(30) என்பவருக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, வினய்குமாரை போலீசார் கைது செய்தனர்

இது தொடர்பான வழக்கு கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே ஜாமீனில் வந்த ராகுராமன் தலைமறைவானார். போலீசார் ரகுராமை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன், ராகுராமன், முத்துக்குமார் ஆகிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், திருட்டு நகையை வாங்கிய நகைக்கடை உரிமையாளர் வினய்குமாருக்கு 2 ஆண்டு சிறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி விஜயா தீர்ப்பளித்தார். 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...