டிசம்பர் 18
குஜராத், இமாச்சாலப் பிரதேச மாநிலங்களின் தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா என பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி விடுத்துள்ளார்.
பெங்களூரூவில் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமர் மோடியை, நடிகர் பிரகாஷ்ராஜ், என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர் என விமர்சித்தார். அது முதல் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.
இந்த நிலையில், குஜராத், மற்றும் இமாச்சலபிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் அன்புள்ள பிரதமர், வெற்றிக்கு வாழ்த்துக்கள்... ஆனால், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.