ஜக்கிவாசுதேவ் தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தியதாக தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங் பேட்டி

கோவை, டிசம்பர் 18

நதிகளை மீட்போம் என்ற பெயரில் இயக்கம் நடத்திய ஈசா யோகா மைய நிறுவனர் ஜக்கிவாசுதேவ் தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி இருந்ததாக தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும் ராஜேந்திரசிங் கோவையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறுகையில், ஒரு அரசாங்கம் ஆற்றையும், நீர் நிலைகளையும் மாசுபடுத்தும் போதும், அதைக் கெடுக்கும் போதும் அதைத் தடுப்பது தான் சாமியாரின் வேலை என மட்டுமே ஜக்கி வாசுதேவினை சந்தித்த போது நான்தெரிவித்தேன். இதுவரை நாடு முழுவதும் 9 ஆறுகளை மீட்டெடுத்து இருக்கின்றேன். ஆனால் மிஸ்டு கால் மூலம் நதிகளை மீட்டெடுப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை, அது எப்படி சாத்தியம் என்பதும் தெரியவில்லை.

இது போன்ற சாமியார்களுடன் அரசியல்வாதிகளும் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ள மனித உறவுகளை சிதைக்கின்றனர். ஜக்கியின் நதிகளை மீட்கும் திட்டம் மக்களிடம் இருந்து நிலத்தைப் பிடுங்குவதற்கான திட்டம். இத்திட்டத்தின் மூலம் பல மாநிலங்களில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது தவறான நடவடிக்கை. 

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ராம் ரஹீம் பாபா, அசாரம் பாபா உள்ளிட்ட 4 பிரபல சாமியார்கள் சிறைக்குச் சென்றுள்ளனர். பழங்குடி பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள் தொடர்ந்துள்ள வழக்கு வென்றுவிட்டால் ஐந்தாவது சாமியாராக ஜக்கி வாசுதேவ் சிறையில் இருப்பார். இவரை அம்பலப்படுத்தாவிட்டால் ஆறுகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு ஏற்படும்.

இத்திட்டத்திற்காக தனது பெயரை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக வழக்குகள் எதுவும் தொடரப் போவதில்லை. ஆனால் ஜக்கி வாசுதேவ்வின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்த உள்ளேன். இதன் ஒரு பகுதியாக ஜக்கிவாசுதேவின் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் 19-ம் தேதி கோவையில் "தர்மம் காப்போம்" என்ற பெயரில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தனது பெயரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மோசடி ஆவணங்கள், ஈசா மையத்தில் சிலர் மர்மமான முறையில் இறந்து போயிருப்பது, சேலத்தில் 9 லட்சம் மரங்கள் நட்டு இருப்பதாக பொய்யான தகவலை பரப்பியது என ஈசா மையம் மேல் உள்ள பல குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்த உள்ளேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இந்த செய்தியாளர் சந்திப்பில், சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ், பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் முத்தம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...