கோவை, டிசம்பர் 18
கார்ப்பரேட் நிறுவனங்களை ஆட்டோ தொழிலில் அனுமதிக்கக் கூடாது. தொழிற்சங்கங்கள் நிர்ணயித்துள்ள கட்டுபடியாகும் கட்டண முறையை அமலாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் கோவையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டியின் சார்பில் ஆட்டோ தொழிலாளர் வாழ்வுரிமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏடிபி ஆட்டோ தொழிற்சங்கத் தலைவர் அன்சர் பாஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து கூட்டத்தில், பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு கட்டுபடியாகின்ற மீட்டர் கட்டணத்தை ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து அமலாக்குவது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், இத்தகைய முடிவிற்கு தமிழக அரசு மற்றும் போக்குவரத்துத்துறை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் 11 ஆட்டோ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.