கோவை, டிசம்பர் 17
இந்திய அரசின் சார்பில் சிஆர்ஐ பம்ஸ் நிறுவனத்திற்கு தேசிய ஆற்றல் சேமிப்பிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த தினத்தன்று இந்திய அரசின் மின்சாரத் துறை அமைச்சகம் சார்பில் மின்சார சேமிப்பில் தலைசிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் மற்றும் எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு. ராஜ் குமார் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் நாட்டில் எரிசக்தி சேமிப்பினை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு என்இசி விருது வழங்கப்பட்டது. இதில், சிஆர்எஸ் பம்ஸ் நிறுவனம் மூன்றாவது முறையாக விருதினை பெற்றது.
இதுகுறித்து சிஆர்ஐ குழும இணை நிர்வாக இயக்குநர் ஜி. செல்வராஜ் கூறுகையில், இதுபோன்ற விருதுகள் எங்கள் நிறுவனத்தை மேலும் ஊக்குவிக்கின்றன. மேலும், நாங்கள் புதுமையான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் மூலம் எரிசக்தி சேமிப்பு பம்ப் செட் வழங்க முயற்சி மேற்கொள்ள உள்ளோம். இது வாடிக்கையாளர்கள், சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நாட்டிற்கு பெருமளவில் பலனளிக்கும். மத்திய அரசின் இந்த விருது சிஆர்ஐ நிறுவனத்தை மேலும் ஒருபடி உயர்த்தியுள்ளது என்றார்.