கோவை, டிசம்பர் 17
கோவையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புத்தாடை வாங்கிதர தந்தை மறுத்ததால் 14 வயது சிறுவன் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர். இவரது மகன் கிளாட்வின் (14). ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.
வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை தொடர்ந்து கிளாட்வின் அவரது தந்தையிடம் புத்தாடை வாங்கித்தர வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதற்கு அவரது தந்தை மறுத்ததால் ஆத்திரமடைந்த கிளாட்வின் நேற்று இரவு வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கிளாட்வினை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பத்தால் கிளாட்வினின் உடலில் 40 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புத்தாடை வாங்க முடியாததால் சிறுவன் தீக்குளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.