முத்தண்ணன் குளத்தை மீட்டெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் தீவிரம்

கோவை, டிசம்பர் 17

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் என்விரான்மென்டல் பவுண்டேஷன் ஃபார் இந்தியா ஆகிய தன்னார்வ அமைப்புகள் இணைந்து காந்தி பூங்கா அருகேயுள்ள முத்தண்ணன் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் இன்று (டிசம்பர் 17) ஈடுபட்டனர்.

சுமார் 170 தன்னார்வலர்கள் இதில் கலந்துகொண்டு, குளக்கரையில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களையும், குப்பைகளையும், கழிவுகளையும் அகற்றி சுத்தம் செய்தனர்.



இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன் கூறியதாவது, ‘கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 45வது வார களப்பணியாக முத்தண்ணன் குளத்தில் உள்ள குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றியுள்ளோம். நீர் நிலைகளை சுத்தம் செய்வதோடு பொதுமக்கள் மத்தியில், குளங்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை மாநகராட்சியோடு இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

சுத்தமான இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு மக்கள் தயங்குகின்றனர். இதனால், குளக்கரையில் கொட்டப்படும் குப்பையின் அளவு முன்பைவிட தற்போது குறைந்துள்ளது. குளக்கரையில் குப்பைகள் கொட்டுவதைத் தடுத்து, நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி சார்பில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்’ என்றார்.



பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், பொதுமக்களும் கலந்து கொண்ட இந்த பொதுநலப்பணியில், நான்கு டன் அளவிற்கு குப்பைகள் குளக்கரைகளிலிருந்து அகற்றப்பட்டது.

‘தொடர்ந்து சுத்தம் செய்து வந்தாலும், நீர் நிலைகளில் குப்பைகள் சேர்ந்து கொண்டே தான் இருக்கிறது. பொதுமக்களின் அலட்சியமே இதற்குக் காரணம். ஆனால், முன்பை விட இப்பொழுது குளக்கரைகளில் கொட்டப்படும் குப்பைகளின் அளவு பெருமளவு குறைந்துள்ளது.



குளத்திற்கு வரும் பறவைகள் பிளாஸ்டிக்கை உணவு என்று எண்ணி சாப்பிட்டு உயிரிழக்கிறது. இதனால், பூஜை பொருட்களை கொட்டவருபவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் பிரித்தெடுத்து தனியாக குப்பை தொட்டியில் கொட்ட வேண்டும்’ என்று வலியுறுத்தினார் இ.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த ஜி.சஞ்சய் பிரசாத்.

தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து எல் அன் டி நிறுவனத்தின் சார்பாக 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முத்தண்ணன் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து எல் அன் டி நிறுவனத்தின் லக்ஷ்மேஷ் கூறுகையில், ‘நிதியுதவி, பொருளுதவி போன்றவற்றை விட, களத்தில் இறங்கி பணி செய்வது மிகவும் உற்சாகமளிக்கிறது. நாளைய தலைமுறைக்கு சுகாதாரமில்லாத சுற்றுச்சூழலை நாம் உருவாக்கியுள்ளோம். ஆனால், சுத்தம் செய்யும் பணியில் குழந்தைகளும் பள்ளி மாணவர்களும் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கும்போது நம்பிக்கை பிறக்கிறது.’ என்றார்.

முன்னதாக, குளங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி ‘மேரா தேரா ரன்’ அமைப்பின் சார்பாக முத்தண்ணன் குளத்தை ஒட்டியுள்ள சாலையில் மினி மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

‘எங்களோடும் உங்களோடும் சேர்ந்த ஓட்டம் என்பதே ‘மேரா தேரா ரன்’-ன் அர்த்தம். கடந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த வருடம் ‘குளங்களுக்கு எங்கள் கால்’ என்ற தலைப்பில் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீர் நிலைகளை மீட்டெடுக்கும் அமைப்புகளோடும், பொதுமக்களோடும் இணைந்து விழிப்புணர்வு ஓட்டத்தை நடத்துகிறோம்.

பதிமூன்று நாட்கள் தினமும் பதிமூன்று மைல் தூரம் ஓட்டம் நடைபெறும். நேற்று கர்நாடகா மாநிலம், கோளாறில் இந்த ஓட்டம் தொடங்கியுள்ளது. கோவைப்புதூர் ரன்னர்ஸ் கிளப்போடு இணைந்து இன்றும் நாளையும் கோவையில் உள்ள குளங்களின் பாதுகாப்புக்காக ஓட்டம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, கேரளா, சேலம், சென்னை, பாண்டிச்சேரியிலும் விழிப்புணர்வு ஓட்டத்தை நடத்தி, பெங்களூரில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றனர் பெங்களூரைச் சேர்ந்த ‘மேரா தேரா ரன்’ அமைப்பினர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...