கோவை, டிசம்பர் 16
2017-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மலேசியாவைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் சீ. முத்துசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் நாளை நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது, பாராட்டு கேடயமும், ரூ. 1,00,000 தொகையும் உள்ளடக்கியது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்கள் பி.ஏ. கிருஷ்ணன், ஜெயமோகன், நவீன், ராஜகோபாலன் ஆகியோருடன் மேகாலயாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜேனிஸ் பேரியட்டும் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
விழாவில் நவீன் இயக்கிய ‘ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்’ எனும் ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. ஜேனிஸ் பேரியட்டின் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பும், சீ.முத்துசாமியின் படைப்புலகம் குறித்து கலைவிமர்சகர்கள் எழுதிய நூலும் விழா மேடையில் வெளியிடப்பட உள்ளது. இதுவரை இந்த விருது ஆ. மாதவன் (2010), பூமணி (2011), தேவதேவன் (2012), தெளிவத்தை ஜோசப் (2013), ஞானக்கூத்தன் (2014), தேவதச்சன் (2015), வண்ணதாசன் (2016) போன்ற படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மலேசியாவைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் சீ. முத்துசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் நாளை நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
நவீன மலேசிய தமிழிலக்கியத்தின் முன்னோடியான சீ. முத்துசாமி 1973 முதல் படைப்பாளியாகத் திகழ்ந்து வருகிறார். சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எனத் தொடர்ந்து உருவாகி வரும் இவரது படைப்புகள் மலேசியாவின் தேசிய இதழ்கள் பலவற்றில் வெளியாகியுள்ளன. இவர், இரைகள், மண்புழுக்கள், இருளில் அலையும் குரல்கள், விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை, அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்கநர்த்தனமும் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
அதில், இரைகள் நூலானது, சிறுகதை குமுதம் பரிசுப்போட்டியில் முதல் பரிசு பெற்றது. மண்புழுக்கள் நாவல், மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றது.