கோவை, டிசம்பர் 15
இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஏ.டி.எம். கொள்ளையர்களை தமிழக போலீசார் தான் பிடித்துள்ளனர் என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் K.பெரியய்யா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த 10-ம் தேதி நடந்த தனியார் வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களுக்குள் புகுந்த வட மாநில வாலிபர்கள் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக, வட மாநில வாலிபர்கள் 8 பேரை கோவை மாநகர காவல்துறையுடன் இணைந்து நாமக்கல் மாவட்டம் மற்றும் சேலம் மாநகர போலீசார் நேற்று கைது செய்தனர்.

இது தொடர்பாக, கோவை மாநகர காவல்துறை ஆணையர் K. பெரியய்யா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
கோவையில் ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்த வட மாநில வாலிபர்களை போலீசார் துரிதமாக கைது செய்துள்ளனர். கைதான 8 பேரும் கேரளா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டு போலீசாரிடம் இருந்து தப்பி வந்துள்ளனர். கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் நாட்டுத்துப்பாக்கி ஒன்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கொள்ளையர்கள் லாரியில் இரண்டு டீசல் டேங்குகளை பொருத்தி வைத்துள்ளனர். அதில் ஒன்றில் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வெல்டிங் இயந்திரம் மற்றும் சிலிண்டர்களை பதுக்கி வைத்துள்ளனர்.
மூன்று பேர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும், இவர்களுக்கும் ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் கொலைக்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிகிறது.
இந்த கும்பலின் தலைவனாக முஸ்தாக் என்பவன் செயல்பட்டுள்ளான். இவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு தான் இந்த கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர். மிக நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிக்க முயன்றனர். ஆனால், மேற்குமண்டல போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையால் வட மாநில கொள்ளையர்களுக்கு தமிழக போலீசார் மீது பயம் ஏற்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாருக்கு விரைவில் வெகுமதி வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, கோவை மாநகர துணை ஆணையர் (குற்றப்பிரிவு) பெருமாள் மற்றும் மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.