கோவை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது : நாட்டு துப்பாக்கி மற்றும் ரூ.3 லட்சம் பறிமுதல்

கோவை, டிசம்பர் 14

கோவையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த வடமாநில வாலிபர்கள் 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ. 3 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையங்களில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் ரூ.26 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக  மாநகர காவல்துறை ஆணையர் K. பெரியய்யா தெரிவித்திருந்தார். 

அதன்படி, குற்றப்பிரிவு உதவி ஆணையர் பாலமுருகன், ஆய்வாளர்கள்  அண்ணாதுரை, அன்பரசு, சரவணம் ஆகியோரது தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஏ.டி.எம். மைங்களின் அருகே இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் வடமாநில வாலிபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர். 



இந்த நிலையில், ஏ.டி.எம்.கொள்ளையர்கள் கார் மூலமாக நாமக்கல் மற்றும் சேலம் செல்வதாக போலீசாருக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 



அதன்பேரில், இன்று காலை நாமக்கல் கீழாம்பூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹரியானா பதிவெண் கொண்ட கார் ஒன்று சுங்கச்சாவடியில் நிறுத்தாமல் சென்றது. 



இதனை தொடர்ந்து, அந்த காரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.  அப்போது காரில் இருந்த மூன்று பேரும் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அருகில் இருந்த கிராமத்திற்குள் தப்பியோடினர். 

குட்டி விமானம்

கிராமத்தில் இருந்த சோளைக்காட்டுக்குள் ஒழிந்து கொண்டிருந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க காமிரா பொறுத்தப்பட்ட குட்டிவிமானம் ஒன்றை போலீசார் பறக்கவிட்டனர். 

தொடர்ந்து கொள்ளையர்கள் மூன்று பேரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தன.

சேலம்

இதே போல், சேலத்தில் ஒரு மினி லாரி போலீசாரின் வாகனத்தனிக்கைக்கு நிற்காமல் சென்றது. அந்த லாரியை மடக்கிப்பிடித்த போலீசார் அதில் இருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஏ.டி.எம்.கொள்ளையில் சம்மந்தப்பட்டவர்கள் என தெரியவந்தது. 

தற்போது கைது செய்யப்பட்ட வாலிபர்களின் பெயர் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். 

அதில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சல்மான் (30), சுபேர் (19), ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அமித்குமார் (35),உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த  முஸ்தக் இடிரிஸ் (32) மற்றும் பீகாரை சேர்ந்த சுல்பிகிரி (25) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கியையும், ரூ.3 லட்சம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த கொள்ளை வழக்கில் மேலும் மூன்று பேர் கைதாகலாம் எனவும், தற்போது கைது செய்யப்பட்டவர்களை கோவையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...