பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


கோவை, டிசம்பர் 14

ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் கோவையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை மற்றும் பணிக்கால பயன்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இன்று பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வரும் தலைமை போக்குவரத்து அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், ஊதியமும் மிகக் குறைந்த அளவிலேயே தரப்படுகிறது. இதற்காக நாங்கள் போராட்டங்களில் ஈடுபடும் பொழுது போராட்டத்தை கைவிடுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் தங்கள் பிரச்சனையைத் தீர்க்க முன்வரவில்லை. 

இதனைக் கண்டித்தும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தியும் பல்வேறு கட்டப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தற்போது 48 மணி நேர போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...