கோவை, டிசம்பர் 13
கோவையில் குண்டும் குழியுமான சாலையில் பேருந்து இறங்கியதில் 70- வயது முதியவர் பலியாகியுள்ளார்.
கணபதிமாநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (70). இவர் இன்று காலை 10 மணியளவில் எஸ்.ஆர்.பி. மில்ஸ் பகுதியில் இருந்து இடையர்பாளையம் செல்வதற்காக மினி பேருந்து ஒன்றில் ஏறினார்.
கூட்ட நெரிசலால் பேருந்தின் படியில் நின்று கொண்டு பயணித்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து ஒரு குழிக்குள் இறங்கியதில் கீழே விழுந்த அந்த முதியவர் பரிதாபமாக பலியானார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "முதியவர் பயணித்த பேருந்து சின்னவேடம்பட்டி அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. அந்த சாலை முழுவதும் பள்ளமும், மேடுமாக இருந்தது.
இந்த நிலையில், பேருந்து ஒரு குழிக்குள் இறங்கவே படியில் நின்றிருந்த பழனிச்சாமி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்" இவ்வாறு போலீசார் கூறினர்.
பாதாள சாக்கடைத் திட்டம், சாலை மேம்படுத்தும் திட்டம் என்ற பல திட்டங்களின் பேரில் தோண்டப்படும் சாலைகள் பல நாட்கள் சரி செய்யப்படாமல் இருந்ததாலே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது என்றும், அதிகாரிகள் அலட்சியப்போக்கை கைவிட்டு உடனடியாக குண்டும் குழியுமான சாலைகளை சீர்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.