சாதிய ஆணவ வெறியர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சங்கரின் தீர்ப்பு...?

தர்மபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலை சங்கர் என ஒரு சில சாதிய ஆணவக் கொலைகள் நாம் அறிந்த ஒன்றே. அவ்வாறான படுகொலைகளுக்கு முன்போ, பின்போ அதன் தாக்கம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

தர்மபுரி, நத்தம் காலனியில் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த இளவரசன், உயர் ஜாதியை சேர்ந்த இளம்பெண் திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் பெரும் கலவரங்கள் நடந்தன. 



 

இந்நிலையில் 2013 ஜூலை 4-ஆம் தேதியன்று இளவரசன் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த மரணம். இதன் பின்னால் சாதிய கட்டமைப்பின் கீழ் இயங்கும் கட்சியின் தலையீடு உள்ளதாக பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டு வந்தாலும் இதுகுறித்தான முழுமையான விசாரணை நடைபெறவில்லை.

இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக சிபிசிஐடி போலிசார் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாகத் தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது.

தர்மபுரி இளவரசன் மர்ம மரணம் போலவே கோகுல்ராஜ் மரணமும் எண்ணற்ற கேள்விகளை எழுப்பின. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும், நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதில் கோகுல்ராஜ் தலித் சமூகத்தைச் சார்ந்தவர், சுவாதி வேறொரு சாதியைச் சேர்ந்தவர். இருவரும் திருச்செங்கோட்டில் உள்ள மலைக்கோவிலுக்குச் சென்று திரும்பும் போது மாவீரன் தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் தலைவர் யுவராஜ் தலைமையில் வந்த சிலரால் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ்.



தலை இல்லாத கோகுல்ராஜின் உடல் ஈரோடு கிழக்கு தொட்டிபாளையத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மாவீரன் தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் தலைவர் யுவராஜ், சதீஷ்குமார், செல்வராஜ், ரஞ்சித், சந்திரசேகரன், ஸ்ரீதர், ஜோதி, அருண், சிவக்குமார் ஆகிய 9 பேர் மீதும் வழக்குத் தொடரப்பட்டு தற்போது வரை அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதுபோன்று சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களே சங்கர்- கவுசல்யா. திருப்பூர் மாவட்டம் குமரலிங்கத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் சங்கர், பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.



இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஆனால், சாதிய ஆதிக்க மனம்கொண்ட கவுசல்யாவின் பெற்றோரோ கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டு கடந்த 2016 மார்ச் 13ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே மனைவி கவுசல்யாவுடன் சென்று கொண்டிருந்த சங்கரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

படுகாயங்களோடு கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கணவரைக் கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்று தொடர்ந்து கவுசல்யா போராடினார். இந்த வழக்கு தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி மற்றும் சில உறவினர்கள், கூலிப்படையினரை கைது செய்த காவல்துறைனர் விசாரணை நடத்தி வந்த நிலையில் இதில் தொடர்புடைய 8 பேருக்கு தண்டனை விதித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சாதிய ஆதிக்கத்தில் சுற்றும் பிரிவினருக்கு ஒரு சவுக்கடியாகவே அமைந்துள்ளது.

ஆதிக்கச் சாதிவெறி இயக்கங்கள் தனது சாதிப் பெருமையையும், தனது சாதிப் பெண்கள் மானத்தையும் காப்பதாகச் கூறிக்கொண்டு சாதிவெறி அரசியலை இளைஞர் மத்தியில் ஊட்டி வருவது தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அரங்கேறிவருவதே.

அதிகாரத்தின் சுரண்டல் குறித்தோ, ஒடுக்குமுறை குறித்தோ, வறுமையில் வாழும் தன் சொந்த சாதி மக்களின் வாழ்வாதாரம் பற்றியோ இந்த சாதிவெறி சக்திகள் கவலைப்பட்டதே கிடையாது. சாதியை வைத்து பிழைப்புவாத அரசியல் செய்யும் இத்தகைய சாதிக் கட்சிகள், ஆளும் வர்க்கத்தோடு பேரம் பேசும் நோக்கம் கொண்டது என்பதை ஒவ்வொரு ஆணவக் கொலைக்குப் பின் நடைபெறும் அரசியல் மாற்றங்களைக் கொண்டு நாம் அறியலாம்.

சாதிவெறி சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதற்கும் மாறாக குற்றங்கள் அனுமதிக்கப்படுவதும் அதற்கெதிரான வழக்குகள் பதிவு செய்யப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாலேயே பல சாதியக் கொலைகள் நடக்கின்றன. தனக்கே உரித்தான பாணியில் மனுதர்ம ஆட்சியை நடத்தும் தமிழக அரசுகள் மாற்றத்துடன் செயல்பட வேண்டும். அப்போது, இதுபோன்ற ஆணவக் கொலைகளை தடுக்க முடியும். இல்லையேல், வட மாநிலங்களைப் போலவே நம் தமிழகத்திலும் அன்றாடம் ஆயிரம் ஆணவக் கொலைகள் அரங்கேறும்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...