டிசம்பர் 17-ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

கோவை, டிசம்பர் 11

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர்மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் டிசம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. 

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர்மன்றம் சார்பில் வரும் டிசம்பர் 17ம் தேதியன்று 10 மணியளவில் மலுமிச்சம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளின் கீழ் நடைபெறும் இப்போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம். இதில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஜூனியர் பிரிவாகவும், 9 முதல் 11-ம் வகுப்பு வரை சீனியர் பிரிவாகவும் போட்டிகள் நடைபெறும்.

ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உட்பட பங்கேற்பாளர்களுக்குத் தேவையானவற்றை அவர்களே கொண்டு வர வேண்டும். போட்டி துவங்கும் முன் தலைப்புகள் அறிவிக்கப்படும். குறிப்பாக, கிராமிய நடனப் போட்டியிலும், திரைப்படப் பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனத்திற்கு அனுமதி இல்லை. கிராமிய நடனத்தில் முறையான கரகம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்களாக இருக்க வேண்டும்.

பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முதல் பரிசு பெறும் சிறார்களுக்கு அரசின் செலவில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெறுவர். மேலும், விபரங்களுக்குக் கோவை மாவட்ட ஜவகர் சிறுவர்மன்ற திட்ட அலுவலரை 97515 - 28188 அல்லது கலைப் பண்பாட்டுத் துறையின் கோவை மண்டல அலுவலகத்தை 0422- 22610290 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...