மடத்துக்குளத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிசம்பர் 11:

திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளத்தில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்பாட்டம் 

செய்தனர்.

மடத்துக்குளத்தில் திருப்பூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக  அறிவித்து 184 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதில் ரூபாய் 74 கோடி மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனா் எனவும் மீதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் வலியுறுத்தினர்.

மேலும் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மடத்துக்குளத்தில் கட்டபட்டுள்ள அரசு மருத்துவமனையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மடத்துக்குளத்தில் உள்ள அரசு சா்க்கரை ஆலையை மேம்படுத்த 25 ரூபாய் கோடி ஒதுக்கி அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

அதே போல் பயிா்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இன்னும் காப்பீட்டு தொகை வழங்காமல் விவசாயிகளை அலைகழித்து வருகின்றனா், பாலுக்கு கொள்முதல் விலையை உயா்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க கோரி கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் 200க்கும் மேற்பட்டோா் கண்டன ஆா்பாட்டம் செய்தனா்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...